லயன்எயார் பறப்பு 602
லயன்எயார் பறப்பு 602 என்பது இலங்கையின் வட-மேற்குக் கரைக் கடலில் வீழ்ந்த இலயன் ஏர் வானூர்தி நிறுவனத்தின் அந்தோனொவ் ஏஎன்-24 ரக பயணிகள் வானூர்தி ஆகும். இவ்வானூர்தி 1998 செப்டம்பர் 29 இல் காங்கேசன்துறையில் இருந்து பல உயர் மட்ட இராணுவத்தினருடனும் சில பயணிகளுடனும் கொழும்பு நோக்கிப் புறப்பட்டது. புறப்பட்ட சில நிமிட நேரத்தில் ராடார் கருவிகளில் இருந்து மறைந்தது. ஆரம்பகட்ட விசாரணைகளில் இருந்து இவ்வானூர்தி விடுதலைப் புலிகளால் சுட்டு வீழ்த்தப்பட்டதாக அறிவிக்கப்பட்டது. அதில் பயணம் செய்த 7 பணியாளர்கள் உட்பட அனைத்து 55 பேரும் கொல்லப்பட்டனர். விமானம் சுட்டு வீழ்த்தப்பட்டதை அடுத்து கொழும்புக்கும் யாழ்ப்பாணத்திற்கும் இடையிலான அனைத்து விமான சேவைகளும் இடைநிறுத்தப்பட்டன.
Read article